advertisement

பாளை கல்லூரி சார்பில் ஆதரவற்றோர் இல்லத்திற்கு  மளிகை பொருட்கள் வழங்கல்

ஏப். 21, 2025 2:57 முற்பகல் |

பாளை கல்லூரியின் மனிதம் அமைப்பின் சார்பில் ஆதரவற்றோர் இல்லத்திற்கு  மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் " மனிதம் " மாணவர் சேவை அமைப்பின் சார்பில் 20-04-2025  அன்று மாலை  5 மணியளவில் திருநெல்வேலி டவுண் மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லத்திற்கு ஒரு மாதத்திற்குத் தேவையான மளிகைப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மனிதம் சேவை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சாதிக் அலி வரவேற்றுப்பேசினார். கல்லூரி துணை முதல்வர் முனைவர்  ச.மு. அ  செய்யது முகம்மது காஜா தலைமையுரை ஆற்றினார். வரலாற்று துறைத் தலைவர் முனைவர் அ  . அப்துல் அஜீஸ், வாழ்த்திப் பேசினார். ஆதரவற்ற இல்லத்திற்கு ஒரு மாதத்திற்குத் தேவையான அரிசி, சீனி, எண்ணெய் பருப்பு மளிகை பொருட்களை  துணை முதல்வர் முனைவர் ச.மு. அ செய்யது முகம்மது காஜா வழங்கினார். முதுநிலை வணிகவியல் மாணவர் ரமேஷ் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வரின்  நேர்முக உதவியாளர்  சரவணவேல் நன்றி கூறினார். ஆதரவற்றோர் இல்லத்தின் முருகேசன்,  R -Soya தொண்டு நிறுவனத்தின் பொறுப்பாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement