பரமக்குடியில் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம்
பரமக்குடியில் தங்கம்மாள் ரஹீம் அறக்கட்டளை நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சி பகுதியான எமனேஸ்வரம் தங்கம்மாள் ரஹிம் அறக்கட்டளை, தினசரி நாளிதழ் , சங்கரா கண் மருத்துவ மனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் அறக்கட்டளை நிறுவன தலைவரும், தினசரி நாளிதழ் ஆசிரியருமான டாக்டர் அ . முகமது அலி ஜின்னா தலைமையில் பரமக்குடி ஆயிரவைசிய சமுக நலச்சங்கம் திருமண மஹாலில் நடைபெற்றது.
தினசரி நாளிதழ் இணையாசிரியர் குயின் இப்ராஹிம்ஷா அனைவரையும் வரவேற்றார். முகாமினை பரமக்குடி நகர் தீயணைப்பு, மீட்புத்துறை நிலைய அலுவலர் ஆர்.குணசேகரன்,தீயணைப்பு, மீட்புத்துறை நிலைய சிறப்பு அலுவலர் அப்பாதுரை,பரமக்குடி நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் வெங்கடேஷ், சண்முகவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி முகாமினை துவக்கி வைத்தனர்.
முகாமில், 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மருத்துவர் ஸ்காலாஷ்டிகாவிடம் தங்களின் கண்ணின் குறைபாடுகளை பரிசோதனை செய்து கொண்டதில் 100க்கும் மேற்பட்டோருக்கு கண் புறை குறை கண்டறிந்து அவர்களை கிருஷ்ணன் கோயில் சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
முகாமில், தங்கம்மாள் ரஹீம் அறக்கட்டளை நிர்வாகிகள் சம்சுதீன்,சீனி முகமது,காதர் அலி, செய்தியாளர்கள் எஸ்.குணாளன், மாமு ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். தங்கம்மாள் ரஹிம் அறக்கட்டளை நிர்வாகி ஜபருல்லாகான் நன்றி கூறினார். முகாமினை , முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் முகமது யூசுப், நாளிதழ் நிர்வாக அலுவலர் இஸ்லாம் நூருதீன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
கருத்துக்கள்