advertisement

ராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சி

ஏப். 21, 2025 9:02 முற்பகல் |

மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சியில் 499 மனுக்கள் பெற்று 13 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வழங்கினார்.
 
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜித் சிங் காலோன் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் குறித்த 499 மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.கூட்டத்தில், வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித் தொகை, தனி நபர் வீடு வழங்குதல் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.

மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்ததாவது : ஒவ்வொரு வாரமும் பொதுமக்களிடம் பெறக்கூடிய மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒரு மாத காலத்திற்குள் மனுதாரர்களுக்கு உரிய தீர்வு வழங்கிட வேண்டும் எனவும், தீர்வு வழங்க முடியாத மனுக்கள் நிலை குறித்து மனுதாரர்களிடம் அலுவலர்கள் எடுத்துரைக்க வேண்டும் எனவும் அலுவலர்களை அறிவுறுத்தினார். மேலும், பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டுமென ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தார்.

தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலம் 09 பயனாளிகளுக்கு திருமண உதவி வழங்கும் திட்டத்தில் 8 கிராம் தங்கமும், 02 பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரமும்,மேலும், முன்னாள் படைவீரர்கள் நலத்துறையின் மூலம் 02 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரமும் என மொத்தம் 13 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வழங்கினார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு, பயிற்சி துணை ஆட்சியர் ப.கோகுல்சிங்,சமூக பாதுகாப்புத்திட்ட தனித் துணை ஆட்சியர் கிருஷ்ணகுமாரி,  செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி, உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட அரசு அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement