தூத்துக்குடியில் மீனவர் வெட்டிக்கொலை
ஏப். 21, 2025 7:12 முற்பகல் |
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் மீண்டும் ஒரு கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாளமுத்துநகர் சுனாமி காலனியைச் சேர்ந்த 21 வயதான மீனவர் ராஜா, ஒரு நாட்டுப் படகில் தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.இந்நிலையில், திரேஸ்புரம் கடற்கரையில் படகில் இருந்து சங்கு எடுக்கச் சென்ற நிலையில், ரத்த வெள்ளத்தில் பல வெட்டுக் காயங்களுடன் அவரது சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது.தகவல் கிடைத்தவுடன் கடலோர காவல் படை போலீசார் விரைந்து வந்து, சடலத்தை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பினர்.போலீசார் கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து, சம்பவத்துக்கான காரணம் மற்றும் கொலைக்குப் பின்னால் உள்ள மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துக்கள்