தூத்துக்குடி 1ம் ரயில்வே கேட் ஏப்.22 முதல் 26வரை மூடல் - தெற்கு ரயில்வே தகவல்
ஏப். 21, 2025 5:23 முற்பகல் |
தூத்துக்குடி 1வது ரயில்வே கேட் வருகிற 22ம் தேதி முதல் 26ஆம் தேதி வரை மூடப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தூத்துக்குடி 1வது ரயில்வே கேட் போக்குவரத்துக்கு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ரயில்வே நிலையம் அருகில் இருப்பதால் இந்த கேட் அடிக்கடி மூடப்பட்டு திறக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வருகிற 22 ஆம் தேதி காலை 9 மணி முதல் 26 ஆம் தேதி காலை 9 மணி வரை 1ம் ரயில்வே கேட் மூடப்படும் என்றும், பொதுமக்கள் இரண்டாவது ரயில்வே கேட்டை பயன்படுத்திக் கொள்ளும்படி ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கருத்துக்கள்