advertisement

ஜேஇஇ மெயின்ஸ் தேர்வில் ஆகாஷ் எட்யுக்கேஷனல் சர்வீசஸ் மாணவர்கள் சாதனை

ஏப். 21, 2025 3:28 முற்பகல் |

ஆகாஷ் எட்யுக்கேஷனல் சர்வீசஸ் லிமிட்டெட், திருநெல்வேலியில் இருந்து கய்நிதா கே,JEE மெயின்ஸ் 2025 (அமர்வு - 2) தேர்வில் 99.94 சதவீத மதிப்பெண்கள் பெற்றார்

திருநெல்வேலி, இந்தியாவின் முன்னணி தேர்வு நிறுவனமான ஆகாஷ் எட்யுக்கேஷனல் சர்வீசஸ் லிமிட்டெட் (AESL) JEE மெயின்ஸ் 2025 (அமர்வு-2) தேர்வில் சிறப்பான வெற்றியை அறிவித்து பெருமைப்படுகிறது. திருநெல்வேலியை சேர்ந்த கய்நிதா கே இந்த தேர்வின் இரண்டாவது அமர்வில் 99.94 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இந்த வெற்றிகள், இந்தியாவின் மிகக் கடினமான தேர்வுகளில் ஒன்றான JEE-மாணவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கல்விசார் சிறப்பை வெளிப்படுத்துகின்றன. தேசிய தேர்வு முகமை (NTA) இன்றைய தினம் இந்த முடிவுகளை வெளியிட்டு, இந்த ஆண்டுக்கான இரண்டாவது மற்றும் இறுதியான JEE அமர்வை முடித்தது.
இந்த மாணவர்களில் பெரும்பாலோர் IIT JEE போன்ற சவாலான நுழைவுத் தேர்வை வெல்லும் நோக்குடன் ஆகாஷின் வகுப்பறை பாடத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.மாணவர்களை பாராட்டி, தீரஜ் குமார் மிஸ்ரா, முதன்மை கல்வி மற்றும் வணிகத் தலைவர், ஆகாஷ் எட்யுக்கேஷனல் சர்வீசஸ் லிமிட்டெட்,
கூறியதாவது:

"JEE மெயின்ஸ் 2025-ல் மாணவர்கள் பெற்றுள்ள சிறப்பான வெற்றியில் மிகவும் பெருமை கொள்வதாகவும் அவர்களின் கடின உழைப்பும், மன உறுதியும், சரியான பயிற்சியுடன் இணைந்து இந்த அபார வெற்றிக்கு காரணமாக இருக்கின்றன. ஆகாஷில், மாணவர்கள் தங்களின் முழு திறமையை அடைய உதவும் தரமான கல்வியை வழங்குவதில் நாங்கள் முழுமையாக ஈடுபட்டு உள்ளோம். வெற்றிபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள், அவர்களின் அடுத்தபடிகளில் வெற்றி சந்திக்க எங்களது வாழ்த்துக்கள்!"

JEE (மெயின்ஸ்) தேர்வு இரண்டு அமர்வுகளாக நடைபெறுகிறது, இது மாணவர்களுக்கு தங்களது மதிப்பெண்களை மேம்படுத்தும் பல வாய்ப்புகளை வழங்குகிறது. JEE அட்வான்ஸ்டு தேர்வு தனிப்பட்ட முறையில் இந்தியாவின் பிரபலமான இந்திய தொழில்நுட்ப கழகங்களுக்கு (IITs) சேரும் வாய்ப்பை அளிக்கிறது. ஆனால் JEE மெயின்ஸ் தேர்வு தேசிய தொழில்நுட்ப நிறுவங்கள் (NITs) மற்றும் மத்திய அரசு நிதியுதவியுடன் இயங்கும் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான வாயிலாக செயல்படுகிறது.JEE அட்வான்ஸ்டு தேர்வில் பங்கேற்பதற்கு,JEE மெயின்ஸ் தேர்வில் பங்கேற்பது கட்டாயமாகும்.

NEET, JEE போன்ற முக்கிய மருத்துவ மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வுகளுக்கும், NTSE மற்றும் ஒலிம்பியாட் போன்ற போட்டித் தேர்வுகளுக்கும் தயாராகும் மாணவர்களுக்கு மிகச் சிறந்த பயிற்சி வழங்கும் நிறுவனமாக AESL பரிச்சயமாகிறது. மாணவர்களின் முழு திறமையையும் வெளிக்கொண்டு வரக்கூடிய தரமான தேர்வுத் தயாரிப்பு சேவைகளை வழங்குவதில் இந்த நிறுவனம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement