advertisement

ராமநாதபுரத்தில் மின்னல் தாக்கி இளம்பெண் பலி.!

ஏப். 21, 2025 11:30 முற்பகல் |

 

முதுகுளத்தூரில் மின்னல் தூக்கில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சுகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள, முதுகுளத்தூர் அருகே கிளாக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மருது. இவருடைய மனைவி சண்முகவள்ளி. ஆடுகளை வளர்த்து வரும் இவர், நேற்று மாலை வழக்கம் போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.பின்னர் வீட்டிற்கு பின்புறம் பட்டியில் ஆடுகளை அடைய போட்டுள்ளார். அப்போது மழை வருவதற்கான சூழல் இருந்த போது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் படி அங்கு விரைந்து வந்த போலீஸார் மின்னல் தாக்கி உயிரிழந்த சண்முகவள்ளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement