குளத்தின் மீது முறைகேடாக போடப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டும் - உபதலைவர் கோரிக்கை
சிலம்பநாதன்பேட்டை186 ஏக்கர் அரசு தரிசு நிலத்தின் மீது போடப்பட்ட பட்டாவை ரத்து செய்ய ஆணையிட்டது போல சேர்வைக்காரன்மடம் ஊராட்சி புல எண் 37 மற்றும் 136 உள்ள 100 கோடி மதிப்புள்ள 32 ஏக்கர் தரிசு மற்றும் ஏலப்பண்ணை என்ற குளம் ஆகியவற்றின் மீது முறைகேடாக போடப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டும் சேர்வைக்காரன்மடம் ஊராட்சி முன்னாள் உபதலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி ஒன்றியத்தில் உள்ள சிலம்பநாதன் பேட்டையில் அரசுக்குரிய சுமார் 180 ஏக்கர் தரிசு தல நிலத்தை சிலர் முறைகேடாக பட்டா பெற்று பயன்படுத்தி வந்துள்ளனர். இப்பிரச்சனை தொடர்பாக சிலம்பநாதன் பேட்டை ஊராட்சி மன்றத் தலைவர் தெய்வானை சிங்காரவேலு அவர்களால் கடந்த 2022 ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அவ்வழக்கு விசாரணைக்கு 9/11/2024வந்த தமிழ்நாடு அரசுத் தரப்பு, 'கிரய ஆவணங்களைக் கொண்டு தவறாக பட்டா பெற்றுள்ளனர். அதனால், பட்டாக்களை ரத்து செய்து 1924 ஆம் ஆண்டு அ பதிவேட்டின்படி தரிசு நிலம் என்று பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என்று கூறியிருக்கிறது . இந்நிலையில் கடந்த 2023 ம் ஆண்டு முதல் தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடம் கிராமத்தில் புல எண் 37 24 ஏக்கர் நிலம் மற்றும் புல எண் 136 ஏலப்பண்ணை என்ற குளம் 8 ஏக்கர் ஆக மொத்தம் 32 ஏக்கர் நிலமானது தகவல் அறியும் உரிமை சட்டம் ஆவணம் மூலம் UDR க்கு முந்தைய அ பதிவேட்டில் அரசு தரிசு என்றும் SLR பதிவேட்டில் சர்க்கார் தரிசு , ஏலப்பண்ணை என்ற குளம் என்றும் உள்ளது.மேலும் புல எண் 37 ஆனது பஞ்சமி என்று முறைகேடாகவும் ஆள்மாறாட்டம் செய்து கடந்த 2007 ஆண்டு பத்திரபதிவு நடைபெற்று பட்டா பெயர் மாற்றம் செய்யபட்டுள்ளது.
ஏற்கனவே UDRக்கு முந்தைய அ பதிவேட்டில் அரசு தரிசு என்று உள்ளது.தற்போது உள்ள UDR ல் பல பெயர்கள் சேர்க்கப்பட்டு தவறு நடைபெற்றுள்ளது .அந்த தவறையும் மீறி துணிகரமாக கு.தங்கவேல் என்று புல எண் 4 A உள்ளது ஆனால் ஆவணம் எண் 1647 மூலம் பா.தங்கவேல் என்பவர் முறைகேடாக பஞ்சமி நிலம் என்று விற்பனை செய்துள்ளார்.ஆனால் UDR க்கு பின் தூத்துக்குடி வட்டத்தில் பஞ்சமி நிலம் இல்லை என்று அரசே சான்றழித்துள்ளது.இது ஒரு சமீப கால எடுத்துக்காட்டு ஆகும் .மேலும் சிவஞானபுரம் கிராமமக்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்த இரண்டு பெரிய ஆலமரம் கொண்ட ஏலப்பண்ணை என்ற குளம் தற்போது ஆக்கிரமிக்கபட்டுள்ளது. மேற்படி விசாரணை கடந்த இரண்டு வருடம் நடைபெற்று வருவாய் துறையால் காலம் தாழ்த்தி நடைபெற்றுவருகிறது.கடந்த 21/02/2025 ந.க.அ1/323/2025 மூலம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை அறிவிப்பு சம்பந்தபட்ட பட்டாவில் பெயர் உள்ள நபர்களுக்கு விசாரணை அனுப்பு சுமார் 52 நாளாகியும் இதுவரை பட்டா ரத்து செய்யப்படவில்லை.
இந்நிலையில் சேர்வைக்காரன்மடம் முன்னாள் ஊராட்சி உபதலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா மாவட்ட ஆட்சியருக்கு மேற்படி இரண்டு வருடமாக அரசு காலம் தாழ்த்தி நடைபெறும் விசாரணையை சுட்டி காட்டி விரைவாக விசாரணை நடத்தி பட்டாவை ரத்து செய்யவும் மேற்கண்ட சிலம்பநாதன் பேட்டை 186 ஏக்கர் நிலம் அரசு பட்டாவை ரத்து செய்ய கூறியதை சுட்டி காட்டி மேற்படி சேர்வைக்காரன்மடம் கிராமத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது.புல எண் 37 மற்றும் 136 இல் போடப்பட்டுள்ள பட்டாவை ரத்து செய்யவேண்டும் என்று மீண்டும் கோரிக்கை மனு அளித்துள்ளார்.இது பற்றி ஏஞ்சலின் ஜெனிட்டா தெரிவிக்கையில் எமது ஊர் கிராம மக்கள் எளிய விவசாய பிண்ணணியத்தை கொண்டவர்கள்.மற்றும் கூலி தொழிலாள குடும்பத்தை சார்ந்தவர்கள்.பலர் சொந்த ஊரில் நிலமற்ற ஏழையாய் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள். எல்லாருக்கு எல்லாம் என்ற மாண்புமிகு முதல்வர் கூற்றின் கீழ் எமது ஊராட்சி இடமற்ற ஏழைகளுக்கு மாண்புமிகு முதல்வர் கவனம் கொண்டு சென்று இலவச இடம் எங்கள் ஊராட்சி மக்களுக்கு எங்கள் ஊரிலே இடம் அளிக்கவேண்டும் என்று வைத்துள்ளேன்.
கடந்த ஊராட்சி தலைவர் நாட்களில் ஊராட்சி தீர்மானத்திலும் பதிவு செய்துள்ளோம்.மேலும் கடந்த 2023 பேரிடர் பெருவெள்ளத்தில் சிவஞானபுரம் பகுதியில் மேற்கண்ட குளத்தை ஆக்கிரமித்ததால் வெள்ளம் ஊருக்குள் பாய்ந்து சிவஞானபுரம் ஊர் மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது.சிவஞானபுரம் ஊர் பெரியவர்கள் வாலிபர்கள் நடவடிக்கையால் வெள்ளம் திருப்பி விடப்பட்டு குளத்திற்குள் சென்றது.அதன் அடையாளம் இன்றும் யூனிக்கா மண்டப எதிர் சாலையாகும்.மேற்கண்ட இடங்கள் மீட்கபடும் வரை தொடர்ந்து எம் ஊராட்சி இளைஞர்களுடன் எம் மக்கள் வாழ்வாதாரத்திற்கு போராடுவோம்.மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முன்னாள் உபதலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா கூறினார்.
கருத்துக்கள்