advertisement

ஈரோடு | போதை மாத்திரை விற்பனை -  இருவர் கைது

ஏப். 19, 2025 6:30 பிற்பகல் |

 

ஈரோடு அருகே ஆன்லைனில் போதை மாத்திரைகளை பெற்று மூதாட்டி மூலம் விற்பனை செய்து வந்த இளைஞர் உள்பட இருவரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து மாத்திரைகள், ஊசிகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே போதை மாத்திரைகள் பயன்பாடு அதிகரித்து வருவது குறித்து காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதில், மூதாட்டி ஒருவர் ஈடுபட்டுள்ளதாக சித்தோடு காவல்துறையினருக்கு தெரிய வந்ததை அடுத்து ஓடப்பள்ளத்தைச் சேர்ந்த திலகாவை (65) என்ற மூதாட்டியை பிடித்து விசாரணை நடத்தியதில், மூதாட்டி திலகா அளித்த தகவலின் பேரில் சந்தோஷ்குமார் (20) என்பரின் வீட்டில் சோதனை செய்துள்ளனர். அங்கு 90 போதை மாத்திரைகள், ஊசிகள், மூன்று செல்போன்கள் உள்ளிட்டவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர், ஆன்லைனில் போதை மாத்திரைகளை ஆர்டர் செய்து அவற்றை மூதாட்டியிடம் கொடுத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement