advertisement

கழுகுமலை- பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்ய முயன்றவருக்கு குண்டாஸ்

ஏப். 19, 2025 6:27 பிற்பகல் |

கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட பகுதியில் பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்ய முயற்சித்த வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான்   பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர்  இளம்பகவத் உத்தரவின் பேரில் கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்ய முயற்சித்த வழக்கில்  சம்பந்தப்பட்ட எதிரியான கயத்தாறு, கெச்சிலாபுரம் பகுதியை சேர்ந்த குமாரசாமி மகன் செந்தில் மள்ளர் (47) என்பவரை இன்று (18.04.2025) கழுகுமலை காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement