ராணிப்பேட்டை கொலை வழக்கில் தலைமறைவான குற்றவாளி; 31 ஆண்டுகளுக்கு பின் கைது
..!
கடந்த 1994-ஆம் ஆண்டு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் உட்கோட்டம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு, நீதிமன்ற விசாரணைக்கு பின்பு 2005-ஆம் ஆண்டு குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இவ்வழக்கில் இரண்டாவது குற்றவாளி தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில், அவரை கைது செய்வதற்கு இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் அடிப்படையில், அரக்கோணம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் அவர்களால் தனிப்படை அமைக்கப்பட்டது.
குறித்த தனிப்படையின் விசாரணையில், அசாம் மாநிலம் திப்ருகார் என்ற இடத்தில் குற்றவாளி தலைமறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது. அதனடிப்படையில் தனிப்படை போலீசார் துரித நடவடிக்கை மேற்கொண்டு திப்ருகார் சென்று குற்றவாளியை அடையாளம் கண்டுள்ளனர். 31 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை 18.04.2025-ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டு, தமிழ்நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கருத்துக்கள்