advertisement

வெல்வோம் 234 வரலாறு படைப்போம் 2026-அமைச்சர் கீதாஜீவன் சூளுரை

ஏப். 19, 2025 11:47 முற்பகல் |

வெல்வோம் 234 வரலாறு படைப்போம் 2026ல் அனைவரும் சபதமேற்று பணியாற்ற வேண்டும். சமூகவலைதள பயிற்சி கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் சூளுரைத்தார்.

தூத்துக்குடி  வடக்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட தூத்துக்குடி கோவில்பட்டி விளாத்திகுளம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளிலும் இளைஞர் அணி அமைப்பாளர்களுக்கான சமூகவலைதள பயிற்சி கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமைவகித்தாா். மாநில இளைஞர் அணி துணைச்செயலாளரும் தொகுதி பொறுப்பாளருமான இன்பாரகு முன்னிலை வகித்தாா். வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், வரவேற்புரையாற்றினாா். 

அமைச்சர் கீதாஜீவன் சமூகவலைதள பயிற்சியை தொடங்கி வைத்து பேசுகையில் தமிழக முதலமைச்சர் உத்தரவுபடி மாநில இளைஞா் அணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டு துறை சிறப்பு திட்ட செயலாக்க துறை துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் கூறியபடி ஒவ்வொரு தொகுதி வாரியாக சமூக வலைதள பயிற்சி நடைபெற்று வருகிறது. இளைஞர் அணி சார்பில் ஒவ்வொரு கமிட்டி அணியினர் சார்பில் தென் மண்டலத்தில் குறிப்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் நடைபெறுகிறது. முதலமைச்சர் ஸ்டாலினை குறைசொல்லவேண்டும் பல பொய்யான தகவல்களும் பரப்புவதற்கென்று நிறைய கட்சிகள் புதிதாக தோன்றியுள்ளனா். சமூக வலைதளம் மூலம் மக்களை ஏமாற்றி விடலாம் என்று பல கட்சிகள் நினைத்து வருகிறது ஆனால் களத்தில் பணிசெய்வதற்கோ கிளை அமைப்போ எதுவும் கிடையாது. ஆட்களும் கிடையாது சமூக வலைதளம் மூலம் இல்லாததை பொல்லாததை சொல்லி நமது முதலமைச்சர் முக.ஸ்டாலின் துணை முதலமைச்சா் உதயநிதிஸ்டாலின் பற்றியும் கூறுவது மட்டுமின்றி அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் மாவட்ட செயலாளர்கள் குறித்தும் சமூக வலைதளம் மூலம் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர் 

அதற்கு நாம் பதிலடி கொடுக்க வேண்டும் அப்போது தான் நாம் களத்தில் நிற்க முடியும் ஒரு நாளைக்கு பத்து நிமிடம் சமூக வலைதளத்தை பார்க்க வேண்டும் முழுமையாக சமூக வலைதளத்துக்கு அடிமையாகக் கூடாது. தமிழ்நாட்டை நாம் காப்பாற்றியாக வேண்டும் தமிழ்நாட்டில் ஆதிக்க சக்திக்கு அதிகாரம் நாம் கொடுத்தக் கூடாது மீண்டும் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்றால் நீட் தோ்வு மட்டுமல்ல சமஸ்கிருதம்படிக்க வேண்டும் என்று ஆடிட்டா் குருமூர்த்தி கூறியுள்ளார். அதை எல்லாம் நாம் மாற்றி உள்ளோம் எல்லோரும் சமம் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் திராவிட மாடல் ஆட்சி இருந்து வருகிறது.  எல்லா சமுதாய மக்களும் முன்னேற்றம் அடைய வேண்டுமென்று நமது தலைவர் பாடுபட்டு வருகிறார் நமது தலைவரை யாரும் கை நீட்டி குறை சொல்ல முடியாது நமது தலைவர் மீது இல்லாதது பொல்லாததையும் சொல்லி வருகிறார்கள் இந்தப் படையினர் அதையெல்லாம் முறியடிக்க வேண்டும் இளைஞர் அணி தகவல் தொழில்நுட்ப அணியை விட  அதிக அளவில் முன்னேறி மக்கள் பணியில் செயல்பட வேண்டும் 

2026ல் நமது தலைவர் மீண்டும் முதலமைச்சர் ஆகிவிடக் கூடாது என்ற எண்ணத்தில் எதிர்க்கட்சியினர் இல்லாததை பொல்லாததை கூறி வருகின்றனர் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 200 தொகுதி என்பதை 234 தொகுதிகளிலும் வெல்வோம், வரலாறு படைப்போ என்பதை சபதம் கொண்டு பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர் கீதாஜீவன் கூறினார். பின்னர் திமுக மாநில செய்தி மக்கள் தொடா்பு துணைச்செயலாளர் சூா்யா கிருஷ்ணமூர்த்தி, வலைதள தன்னாா்வலா் இளம்மாறன் ஆகியோா் சமூகவலைதளம் உள்ளிட்டவைகளை எப்படி பணியாற்ற வேண்டும் என்று விளக்கவுரையாற்றினாா்கள். 
நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர்செல்ராஜ், துணை செயலாளா் ராஜ்மோகன் செல்வின. பொருளாளா்ரவீந்திரன், மாநில பொறியாளர் அணி அன்பழகன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் பிரதீப், ராதாகிருஷ்ணன், மகேந்திரன், ஜோசப்அமல்ராஜ், பாரதி, மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ரவி, செல்வின், சங்கரநாராயணன், பிரவீன்குமாா், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், துணை அமைப்பாளர்கள் அந்தோணிகண்ணன், பிரபு, நாகராஜன், அருணாதேவி, மாவட்ட பிரதிநிதி நாராயணன், பகுதி செயலாளர்கள் நிர்மல்ராஜ், சுரேஷ்குமாா், ரவீந்திரன், மேகநாதன், ஜெயக்குமாா், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர்கள் அண்ணாத்துரை, சுரேஷ்குமாா், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூா்யா, இளம்பேச்சாளர் செந்தூா்பாண்டி, பெருமாள் கோவில் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், மற்றும் மணி அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனா். மாநகர இளைஞா் அணி அமைப்பாளா் அருண்சுந்தா் நன்றியுரையாற்றினாா். 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement