advertisement

சேர்வைக்காரன்மடம் ஊராட்சி அவலங்களை நீக்குவாரா கலெக்டர் ?- பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஏப். 19, 2025 7:12 முற்பகல் |

சேர்வைக்காரன்மடம் ஊராட்சிக்கு ஏப் 19 அன்று வருகைதரும் மாவட்ட ஆட்சியர்  ஊராட்சியின்  அவலங்களை பார்வையிட்டு அதை நீக்கி மக்கள் வாழ்வாதாரத்தை பாதுகாப்பாரா ? என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

சேர்வைக்காரன்மடம் ஊராட்சி தங்கம்மாள் புரம் 2020 ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் நிதி ரூ பத்து லட்சத்தில் கட்டப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம்  திறக்கப்படாமல்  அரசு பணம் பத்து லட்சம் வீணாண நிலையில் உள்ளது .பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.அதை திறக்க நடவடிக்கை எடுத்து   மக்களுக்கு  சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் வழங்குவாரா? (பத்து லட்சம் ரூபாய் ). 2) கடந்த 2018/19 ஆம் ஆண்டு சாலை அமைக்க ஆணை பெற்ற சேர்வைக்காரன்மடம் கிழக்குதெரு சாலை அமைக்காமல் முறைகேடாக 30,912 ரூபாய் பணம் எடுத்து  5 வருடம் கழித்து சாலை அமைக்காமல் ரூபாய் 2 ,58,169.55 பணம் எடுக்க போலி பில்லை வைத்து அரசு பணத்தை கையகப்படுத்த முற்படும் கும்பல்களை  தடுத்து கடும் நடவடிக்கை எடுத்து சேர்வைக்காரன்மடம் கிழக்கு தெரு மக்களுக்கு சாலை அமைத்து கொடுப்பாரா ? 3)செந்தியம்பலம் அங்கன்வாடி கட்டிடம் தள ஒடு பழுதடைந்த நிலையில் பல வருடம் கோரிக்கை அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் தற்போது பெயிண்ட் மட்டும் அடித்து அங்கன்வாடியை சீரமைக்காமல் உள்ள அவல நிலையை ஆய்வு செய்வாரா? குழந்தைகளை பாதுகாப்பாரா ?                               

4 கடந்த நிதியாண்டு 15 வது நிதிக் குழுவில் சக்கம்மாள்புரம் இடுகாட்டுக்கு வேலி அடைக்கக் தீர்மானம் இட்டு அதை செயல் படுத்தாமல் அந்த திட்டத்தின் கீழ் வேறு இடத்திற்கு வேலி அமைத்து. சக்கம்மாள்புரம் மக்களை ஏமாற்றியதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பாரா?.    5) மக்கள் வரிப்பணத்தில் புதுமனை சாலையில் அலங்கோலமாக சாலை அமைத்து பல முறை மனு அளித்தும் காதை அடைத்து வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பாரா?.... புதுமனை சாலையின் அவலத்தை நேரில் ஆய்வு செய்வாரா?.தாங்கள் மரக்கன்று நடும் இடம் கடந்த ஆண்டு 15 வது நிதிக் குழுவில் சேர்வைக்காரன்மடம் ஊராட்சி மக்களுக்கு குப்பை போடுவதற்காக வேலை நடைபெற்று சுமார் 2 லட்சம் செலவில் வேலை நடைபெற்ற பகுதி. 

தற்போது மரம் நடு விழா காண இருக்கிறது.நேற்று குப்பை தட்டும் இடம் இன்று  மர நடும் இடும் நாளை எதோ?சேர்வைக்காரன்மடம் ஊர் மக்களுக்கு தற்போது குப்பை குளத்தில் கொட்டப்படுகிறது.  குளத்தில்  குப்பை தட்டுவதை தடுத்து வேறிடத்தில் குப்பை கொட்ட வழிவகை செய்வாரா ? 7) சிவஞானபுரம் முதல் திருமலையாபுரம் வரை 500 மரக்கன்றுகள் நட்ட சுமார் 3 லட்சம் செலவு செய்து கணக்கு காண்பித்து 30 மரம் உள்ளதை பார்வையிடுவாரா? Pmay திட்டத்தில் வேலை முடிக்காமல் அரசு பணம் பல லட்சம் வழங்கிய வீட்டை பார்வையிடு வாரா?

மாவட்ட ஆட்சியர் 1) *குடிக்க தண்ணீர் தாருங்கள் (தங்கம்மாள்புர ம் தண்ணீர் நிலையத்தை திறந்து தாருங்கள் 2) உயர் அதிகாரிகளையும் தங்கள் கவனத்திற்கு பொய்யான தகவல் அளித்து  சேர்வைக்காரன்மடம் ஊராட்சி  மக்களின் வாழ்வாதார திட்டங்களை மக்களுக்கு அளிக்காமல் சுரண்ட நினைக்கும் கும்பல்கள் மீது நடவடிக்கை எடுத்து 1) ஒடக்கரை சாலை ,புதுமனை சாலை மறு சீரமைப்பு செய்து ,சேர்வைக்காரன்மடம் கிழக்கு தெரு சாலையை அமைக்கவேண்டும்.தங்கள் பயணம் இனிதாக அமையட்டும் எங்கள் மக்கள் வாழ்வாதாரம் செழிக்கட்டும் .எதிர்பார்ப்போடு சமூக ஆர்வலர்கள் சேர்வைக்காரன்மடம் பகுதி மக்கள் உள்ளனர்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement