advertisement

விபத்தில் சிக்கிய நடிகர் பாபி சிம்ஹாவின் கார்.- 6 வாகனங்களை சேதப்படுத்தி விபரீதம் !

ஏப். 19, 2025 9:05 முற்பகல் |

 

சென்னை கத்திப்பாரா பகுதியில் சொகுசு காரில் வந்து விபத்தை ஏற்படுத்தியதாக நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று மாலை 6 மணியளவில் கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் சென்றுக்கொண்டிருந்த வாகனம் ஒன்று. இரண்டு ஆட்டோ, இரண்டு இருசக்கர வாகங்கனம், மூன்று கார் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. இதனால், 3 பேர் காயமடைந்தனர், 6 பேரின் வாகங்கள் சேதமாகின. இதனையறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து காவல்துறையினர், விபத்து ஏற்படுத்திய வாகனம் மற்றும் விபத்தால் பாதிப்படைந்த வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இது பாபி சிம்ஹாக்கு சொந்தமான கார் என்று தெரியவந்தது. மேலும் இதை ஓட்டியது டிரைவர் புஷ்பராஜ் என்பதும் விசாரித்த போது தெரியவர, தான் மதுபோதையில் இருந்ததையும் அவர் ஒப்புக்கொண்டார்.தொடர்ந்து டிரைவர் புஷ்பராஜை நேற்று இரவு போலீஸார் கைது செய்தனர். அவர் ஓட்டி வந்த பாபியின் சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement