advertisement

தூத்துக்குடியில் பா.சிவந்தி ஆதித்தனார் உருவ படத்திற்கு அமைச்சர் கீதாஜீவன் மரியாதை!

ஏப். 19, 2025 11:13 முற்பகல் |

 

தூத்துக்குடியில் தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

தினத்தந்தி நாளிதழ் அதிபர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 12வது நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் காமராஜ் காய்கனி மார்க்கெட் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திமுக மாவட்ட செயலாளர் கீதா ஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி திலகராஜ்,  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement