திருநெல்வேலி -அனைத்து தொழிற்சங்க மாவட்ட குழுக்கள் சார்பில் ஆயத்த மாவட்ட மாநாடு
ஏப். 19, 2025 9:57 முற்பகல் |
திருநெல்வேலி அனைத்து தொழிற்சங்க மாவட்ட குழுக்கள் சார்பில் ஆயத்த மாவட்ட மாநாடு நடைபெற்றது.
மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து திருநெல்வேலி அனைத்து தொழிற்சங்க மாவட்ட குழுக்கள் சார்பில் மே 20 அன்று அகில இந்திய பொது வேலைநிறுத்தை முன்னிட்டு சந்திப்பு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற வேலை நிறுத்த ஆயத்த மாவட்ட மாநாட்டில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் .அப்துல் வஹாப் துவக்க உரையாற்றினார். தொழிற்சங்க அமைப்பு செயலாளர் தர்மன் தலைமை தாங்கினார். மேயர் தி ராமகிருஷ்ணன் , பாளையங்கோட்டை பகுதி திமு கழக செயலாளர் அன்டன் செல்லதுரை அவர்கள் மாவட்ட தகவல் தொழில் பணி ஒருங்கிணைப்பாளர் காசிமணி அவர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்
கருத்துக்கள்