மாணவர்கள் மீது தாக்குதல் - பழனி கல்லூரி பேராசியர் இடைநீக்கம்.!!
பழனியில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கல்லூரி பேராசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி பழனி கோவிலுக்கு உட்பட்டதாகும். இந்த கல்லூரியில் சுயநிதி பிரிவு வணிகவியல் துறையில் கவுதமன் என்பவர் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.
அவர் வகுப்பறைக்குள் மாணவர்களை நாற்காலியை கொண்டு தாக்குவதும், ஆபாச வார்த்தைகளில் பேசியதும் போன்ற வீடியோ சமூகவலைதளத்தில் பரவி வைரலானது. இது தொடர்பாக பேராசிரியர் கவுதமன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் புகார் அளித்தனர்.
அந்தப் புகாரின் அடிப்படையில் கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தியது. அதன் படி கல்லூரி நிர்வாகம், பேராசிரியர் கவுதமனை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துக்கள்