சட்டம் ஒழுங்கு பற்றி பேச முதல்வருக்கு அருகதை இல்லை - எடப்பாடி பழனிச்சாமி பதிலடி
ரெய்டுகளுக்கு பயந்து.. தொடை நடுங்கிக் கொண்டிருப்பது யார்? மக்கள் நன்கு அறிவார்கள்! என முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில்,முக ஸ்டாலின் அவர்களே- நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது!அதிமுக ஒருபோதும் தமிழ்நாட்டை, நம் மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காது! மாறாக, நமக்கான மாநில உரிமைகளை பெற்றுத் தரவே செய்யும்!
மணிப்பூர் மாநிலப் பிரச்சனைகள் பற்றி உங்களுக்கு இருக்கும் அக்கறை, துளியாவது உங்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக பெண்கள் மீது இருந்ததா? அவர்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்த உங்களுக்கு சட்டம் ஒழுங்கு பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?
காவிரி உரிமையை பெங்களூரிலும், முல்லைப் பெரியாறு அணை உரிமையை திருவனந்தபுரத்திலும் அடகு வைத்த தி.மு.க.வின் தலைவர் அதைப் பற்றி கவலைப் பட வேண்டாம்!தமிழ்நாடு விரோத தி.மு.க. வின் ஊழல் ஆட்சியை தோலுரித்து, மக்களின் பேராதரவோடு அதிமுக தலைமையிலான கூட்டணி 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாகை சூடும்! என தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்