advertisement

சிவகங்கை மாணவிக்கு 400 முறை தோப்புக்கரணம்-ஆசிரியைக்கு கிடைத்த தண்டனை!

ஏப். 24, 2025 11:16 முற்பகல் |

 

மாணவியை தோப்புக்கரணம் போடச் செய்த ஆசிரியைக்கு 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அரசுப் பள்ளியில், ஏழாம் வகுப்பு மாணவி வீட்டுப்பாடம் செய்து வராததால், ஆசிரியை சித்ரா, மாணவியை 400 முறை தோப்புக்கரணம் போட வைத்ததாகக் கூறப்படுகிறது.இதனால் மாணவியின் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும், மனிதாபிமானமற்ற முறையில் செயல்பட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் மாணவியின் தாயார், மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.

2017ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவம் குறித்து விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், ஆசிரியை தரப்பு விளக்கமளிக்க வாய்ப்பளித்தும் பதில் கூறவில்லை என்று குறிப்பிட்டார். மனித உரிமை மீறலில் ஆசிரியை ஈடுபட்டது தெளிவாவதாகக் கூறி, மனுதாரருக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடாக ஒரு மாதத்தில் வழங்கும்படியும், இந்த தொகையை ஆசிரியை சித்ராவிடம் இருந்து வசூலித்து, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement