பஹல்காம் தாக்குதல் - உயிரிழந்தவர்களுக்கு கோவில்பட்டியில் அஞ்சலி
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பாஜக சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கோவில்பட்டியில் நேற்று நடைபெற்றது.
கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பாஜக நகர தலைவர் காளிதாசன் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் மகாலட்சுமி, மாவட்ட பொதுச்செயலர் வேல்ராஜா, மாவட்ட பொருளாளர் கணேஷ், பட்டியலணி செயலர் சிவந்தி நாராயணன் உட்பட பாஜக நிர்வாகிகள், இந்து முன்னணி பொறுப்பாளர்கள் ஏராளமான ஒரு கலந்து கொண்டு பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தோரின் ஆன்மா சாந்தியடைய வேண்டி மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
இதுபோல கழுகுமலை காந்தி மைதானத்தில் பாஜக கயத்தாறு மேற்கு ஒன்றிய தலைவர் முத்துராமலிங்கம், கயத்தாறில் பிரதான சாலை சந்திப்பில் கயத்தாறு கிழக்கு ஒன்றிய தலைவர் ராமர் பாண்டியன் ஆகியோர் தலைமையில் பஹல் காமில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கருத்துக்கள்