advertisement

மகாராஷ்டிரா -மனைவி நடத்தையில் சந்தேகம் : கல்லால் தாக்கி கொன்ற கணவர் கைது.!

ஏப். 25, 2025 4:38 முற்பகல் |


 
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் மாவட்டம் நாக்யா கட்காரிபாடா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், குப்பை பொறுக்கும் தொழிலாளியாக இருந்து வந்துள்ளார். இவர் நடத்தையில் பெண்ணின் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டு தம்பதியினருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், அந்தப் பெண் கடந்த 21-ந்தேதி இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை. அப்போது, அந்த பெண் வாடி பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் இருப்பதாக கிடைத்த தகவலின் படி பெண்ணின் கணவர் விரைந்துச் சென்று தூங்கிக்கொண்டிருந்த மனைவியை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், தன்னுடன் வீட்டிற்கு வருமாறு கூறினார்.

இதற்கு அந்தப்பெண் மறுப்புத் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அவர் அங்கு கிடந்த கல்லை எடுத்து மனைவியை சரமாரியாக தாக்கினார். இதில் அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் படி போலீசார் விரைந்து வந்து பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து பெண்ணின் கணவரிடம் விசாரணை நடத்தியதில், நடத்தை சந்தேகம் காரணமாக மனைவியை கல்லால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement