சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து: பாகிஸ்தானில் மக்கள் போராட்டம்!
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக இந்தியா வியாழனன்று அறிவித்தது.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர்களின் போது கூட நிறுத்தப்படாத சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தம், பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து நிறுத்தப்பட்டிருப்பது, பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. பாகிஸ்தானின் நீர்ப் பாசன தேவையில் 93 சதவீதம் தண்ணீர் சிந்து நதி ஒப்பந்தம் மூலம் கிடைக்கிறது. சிந்து நதி படுகையில்தான் 61 சதவிகித பாகிஸ்தானியர்கள் வாழ்ந்து வருகின்றனர். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து சிந்து, ஜீலம், செனாப் நதிகளின் மீது இந்தியா அமைத்திருக்கும் அணைகளில் இருந்து பாகிஸ்தானுக்கு விடுவிக்கப்படும் தண்ணீர் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பாகிஸ்தானின் பஞ்சாப், சிந்து மாகாணங்களில் வேளாண்மை மற்றும் குடிநீர் தேவைக்கான தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த அணைகளில் இருந்து இயற்கையாக பாய்ந்தோடும் ஆற்று நீர் ஓடிக் கொண்டிருக்கும் என்றும் தற்போது ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் இந்த ஆறுகளின் குறுக்கே இந்தியா அணைகட்டி கொள்வதற்கு வாய்ப்பு உருவாகியுள்ளதாகவும் ஓய்வுபெற்ற கர்னல் ஜான் பிரின்ஸ் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்