advertisement

TNPSC குரூப் 4 தேர்வு 2025 அறிவிப்பு வெளியீடு தேர்வு தேதி  மாற்றம்!

ஏப். 25, 2025 5:15 முற்பகல் |


 

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்வுதமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களின் இருக்கும் அடிப்படை பதவிகள் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்நிலையில், 2025-ம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு மொத்தம் 3,935 காலிப்பணியிடங்களுக்கு வெளியாகியுள்ளது. மேலும், தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அமைச்சுப் பணி, ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம், வனத் தோட்டக்கழகம், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம், தொழிலாளர் கல்வி நிலையம், சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம், மாநில தேர்தல் ஆணையம், வன சார்நிலை பணி, வன தோட்டக் கழகம் உள்ளிட்ட துறைகளின் கீழ் இருக்கும், கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலைல் உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியளர், வனக் காப்பாளர் உள்ளிட்ட பதவிகள் குரூப் 4 தேர்வில் இடம்பெறுகிறது.

வயது வரம்பு
கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு குறைந்தபட்சம் 21 முதல் அதிகபடியாக 42 வரை இருக்க வேண்டும்.
வனக் காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர், வனக் காவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு குறைந்தபட்சம் 21 முதல் அதிகபடியாக 37 வரை இருக்கலாம். இதர பதவிகளுக்கு 18 முதல் 34 வரை இருக்கலாம். வயது வரம்பில் தளர்வு உள்ளது.

கல்வித்தகுதி
குறைந்தபட்ச பொதுக் கல்வி தகுதி கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். அதாவது, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளநிலை உதவியாளர் பதவிகளுக்கு பட்டப்படிப்பு அவசியம். ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பதவிக்காக இத்தேர்வை எழுதலாம். அதே போன்று, தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தர் பதவிகளுக்கு 10ஆம் வகுப்புடன் அதற்கான தொழில்நுட்ப தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.வனக் காப்பாளர் பதவிக்கு 12-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். வானக் காவலர் பதவிக்கு 10-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை
குரூப் 4 தேர்வு ஒரே கட்ட தேர்வாகும். அதனைத்தொடர்ந்து, கட்-ஆஃப் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்படும். ஆன்லைன் வழியாக சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அனுமதிப்படுவார்கள். தொடர்ந்து, நேரடி சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.டிஎன்பிஎஸ்சி 2025-ம் ஆண்டு திட்ட அட்டவணையின்படி, 13.07.2025 அன்று நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில், தற்போது, 12.07.2025 காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கு https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். முதல் ஒடிஆர் பதிவு செய்து பின்னர் தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டும். இன்று (ஏப்ரல் 25) ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும். கட்டணத்தில் உள்ள தளர்வு குறித்து அறிவிப்பில் அறிந்துகொள்ளலாம்.


முக்கிய நாட்கள்
விவரம்    முக்கிய நாட்கள்
விண்ணப்பம் தொடங்கும் நாள்    25.04.2025
விண்ணப்பிக்க கடைசி நாள்    24.05.2025
விண்ணப்பம் திருத்தம்    29.05.2025 முதல் 31.05.2025
தேர்வு தேதி    12.07.2025

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் அதிக காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என எதிர்பார்த்த நிலையில், 3,935 காலிப்பணியிடங்களுக்கு மட்டுமே அறிவிப்பு வெளியானது தேர்வர்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் ஆன்லைன் வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement