சாலையில் கிடந்த 2 லட்சம் பணம் - போலீசில் ஒப்படைத்த கட்டிட தொழிலாளி
ஏப். 25, 2025 6:11 முற்பகல் |
சென்னையில் உள்ள நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி உமாபாரதி. இவர் நேற்று அப்பகுதியில் உள்ள சாலையில் சென்றுகொண்டிருந்தப்போது, சாலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் பை ஒன்று கிடந்துள்ளது.
இதைக் கண்ட உமாபாரதி அந்த பையை எடுத்து பார்த்தார். அதில் ரூ. 2 லட்சம் பணம் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த உமாபாரதி உடனடியாக பணப்பையுடன் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்றார்.
அங்கு பணப்பையை போலீசாரிடம் ஒப்படைத்தார். பின்னர் போலீசார் பணப்பையில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு, பணத்தை உரியவரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.
அதுமட்டுமல்லாமல். சாலையில் பையில் கிடந்த ரூ. 2 லட்சம் பணத்தை பத்திரமாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த கட்டிட தொழிலாளி உமாபாரதிக்கு போலீசார் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.
கருத்துக்கள்