advertisement

ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கையில் கிடைத்த பொக்கிஷம்...

ஏப். 24, 2025 11:59 முற்பகல் |


ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ஒன்றரை கோடி எட்டியுள்ளதாக, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி, அயல்நாட்டு பணங்களும் கிடைத்துள்ளன.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அமைந்திருக்கும் ராமநாதசுவாமி கோவிலுக்கு நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன் நிறைவேற வேண்டி கோவில் உண்டியலில் காணிக்கைகள் செலுத்திச் செல்வது வழக்கமாக உள்ளது. இதனை கோவில் நிர்வாகம் சார்பில் மாதந்தோறும் எண்ணும் பணியானது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கோவிலின் கிழக்கு கோபுர மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உண்டியல் காணிக்கையை எண்ணினர்.

ஒரு நாள் முழுவதும் உண்டியல் காணிக்கை எண்ணி முடித்ததில் ஒரு கோடியே நாற்பத்து ஏழு லட்சத்து நாற்பத்து இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்து மூன்று ரூபாய் பணம், 98 கிராம் தங்கம், 4 கிலோ 100 கிராம் வெள்ளி, 162 அயல்நாட்டு பணங்கள் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement