advertisement

லெபனானை கடுமையாக தாக்கும் இஸ்ரேல்; புகைப்படங்கள் வெளியீடு

அக். 03, 2024 9:29 முற்பகல் |

 

லெபனானின் மத்திய பெய்ரூட் நகரின் அல்-பச்சவுரா பகுதியில் நடந்த தாக்குதலில் 5 பேர் பலியாகி உள்ளனர் என லெபனானின் பொது சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தி ஓராண்டு நிறைவடைய உள்ள சூழலில், இஸ்ரேலும் தொடர்ந்து காசாவை இலக்காக கொண்டு போரில் ஈடுபட்டு வருகிறது. இதில், 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் உயிரிழந்து உள்ளனர். இந்த சூழலில், பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு செயல்பட்டு வருகிறது.

லெபனானில் இருந்தபடி இஸ்ரேலை இலக்காக கொண்டு தாக்குதலை தொடுத்து வருகிறது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இதில் அந்த அமைப்பின் பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேல் மற்றும் லெபனான் நாட்டில் இருந்து செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு இடையேயான மோதல் அதிகரித்து வரும் சூழலில், லெபனானின் பெய்ரூட் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவில் இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் நகரில் மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் மற்றும் பல கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளன.இதேபோன்று, மத்திய பெய்ரூட்டின் அல்-பச்சவுரா பகுதியில் ஹிஸ்புல்லா அமைப்புடன் தொடர்புடைய சுகாதார அதிகாரிகளுக்கான மையம் மீது இன்று காலை திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், பெரிய அளவில் தீ பரவியது. இதனால், கட்டிடத்தில் இருந்து அதிக அளவில் கரும்புகை விண்ணை நோக்கி எழுந்தது.

அல்-பச்சவுரா பகுதியில் நடந்த தாக்குதலில் 5 பேர் பலியாகி உள்ளனர் என லெபனானின் பொது சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு முன், ஹரெத் ஹிரீக் பகுதியில் வான்வழியே 3 கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement