advertisement

சென்னை மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான வேலைவாய்ப்பு முகாம்

நவ. 24, 2024 8:14 முற்பகல் |

திருநங்கைகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க நவ.25க்குள் சுயவிவரக் குறிப்பு விவரங்களை அனுப்பலாம் என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் பொருட்டு திருநங்கைகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் சென்னை மாவட்டத்தில் நடத்தப்பட உள்ளதால் அதற்கு ஏதுவாக தூத்துக்குடி மாவட்டத்தில் விருப்பப்படும் திருநங்கைகளின் சுயவிவரக் குறிப்பு விவரங்களை படிவத்தில் பூர்த்தி செய்து 25.11.2024 காலை 10  மணியளவில் தூத்துக்குடி மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம்,  தூத்துக்குடி சமர்ப்பிக்க வேண்டும் என  தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement