advertisement

மேல்மாந்தை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் மகாதேவ அஷ்டமி பூஜை

நவ. 23, 2024 11:53 முற்பகல் |

 


மேல்மாந்தை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் மகாதேவ அஷ்டமி பூஜை இன்று ( நவ 23 ) நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மேல்மாந்தை கிராமத்தில் சுமார் 2000 ஆண்டுகள் பழைமையான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் இருந்து வருகிறது. இந்த கோவிலின் விஷேச அமைப்பே இங்குள்ள பைரவர் தான் என அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். அதாவது இங்குள்ள சுவாமி பைரவருக்கு அபிஷேகம் செய்யும் பசும் பால் நீல நிறமாக மாறும் அதிசயம் இன்றளவும் நடைபெற்று வருகிறது.இங்குள்ள பைரவருக்கு பொதுமக்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து ஒரு விளக்கு ஏற்றினால் கோரிக்கை நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 

இத்தனை பிரசித்தி பெற்ற கோவிலில் மகாதேவ அஷ்டமி பூஜை இன்று ( நவ 23 ) நடைபெற்றது.இதை முன்னிட்டு காலை 7 மணிக்கு மஹாஹோமம், காலை 8.30 மணிக்கு நவகிரக ஹோமம், காலை 10 மணிக்கு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம்,பூஜை,மதியம் 12 மணிக்கு, பைரவர்க்கு அபிஷேகம்,பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மேல்மாந்தை ஜமீன் முத்தையாசாமி, தூத்துக்குடியை சேர்ந்த காசிலிங்கம், மணி உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள்  நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
  • s
    s.ganesan நவ. 24, 2024 9:24 முற்பகல்
    ஓம் கால பைரவா நமக
    0 0
advertisement
advertisement