அருவாளைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற நபர் குண்டாசில் கைது
நவ. 27, 2024 1:24 பிற்பகல் |
திருநெல்வேலியில் அருவாளைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற நபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி டவுணைச் சேர்ந்த, ஆனந்தராஜ் என்பவரை அருவாளைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்த திருநெல்வேலி டவுண் பகவத்சிங் தெருவை சேர்ந்த இசக்கி மகன் சீனிவாசன்(24) என்பவர் மீது திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர், மேற்கு, கீதா, திருநெல்வேலி டவுண் சரக காவல் உதவி ஆணையர் செந்தில்குமார் மற்றும் திருநெல்வேலி டவுண் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், ரூபேஷ் குமார் மீனா உத்தரவின்படி 26.11.2024-ம் தேதி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.
கருத்துக்கள்