உமரிக்காட்டில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி
தூத்துக்குடி மாவட்டம் உமரிக்காடு ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிலவேம்பு குடிநீர் வழங்குதல், கொசு ஒழிப்பு மருந்து தெளித்தல் பணிகள் நடைபெற்றன.
பஞ்சாயத்து தலைவர் ராஜேஷ் குமார் தொடங்கி வைத்தார். டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க உமரிக்காடு ஊராட்சி தொடக்கப் பள்ளியில் நடந்த நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியில் ஏரல் அரசு சித்த மருத்துவர் ரோசர்ட்டி தலைமை வைத்தார்.தலைமை ஆசிரியர் ஜெயஷீலா முன்னிலை வகித்தார். பஞ்சாயத்து ராஜேஷ்குமார் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள், சுகாதார ஆய்வாளர்கள் விஜூ, லட்சுமணன் சித்தா மருந்தாலுநர் காந்திமதி,மஸ்தூர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து உமரிக்காடு ஊராட்சி பகுதி முழுவதும் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்க பஞ்சாயத்து தலைவர் ராஜேஷ் குமார் ஏற்பாடு செய்து பணிகள் நடைபெற்றன
கருத்துக்கள்