வாடகை கடைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு - நாகர்கோவிலில் கண்டன ஆர்ப்பாட்டம்
நவ. 27, 2024 12:08 பிற்பகல் |
வாடகை கடைகளுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பை கண்டித்து நாகர்கோவிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வாடகை கடைகளுக்கு மத்திய அரசு விதித்துள்ள 18% ஜி எஸ் டி வரியை திரும்பப் பெறக் கோரி நாகர்கோவிலில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளரும்& வணிகர்கள் மகாஜன சங்க கன்னியாகுமரி மாவட்ட தலைவர் ஆர்.எஸ்.ராஜன் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்.
கருத்துக்கள்