advertisement

திருச்செந்தூர் தெய்வானை யானையை அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு

நவ. 24, 2024 8:18 முற்பகல் |

 


யானைகளை புத்துணர்வு முகாமிற்கு அனுப்புவது குறித்து கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என திருச்செந்தூரில் கோவில் யானை தெய்வானையை ஆய்வு செய்த பிறகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் கோவில் யானை தாக்கி உயிரிழந்த பாகன் உதயகுமார் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவதற்காக திருச்செந்தூர் வருகை தந்தார். அவர் முதலில் திருச்செந்தூர் கோவில் உள்ள தெய்வானை யானையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதைத் தொடர்ந்து அங்கிருந்து பணியாளர்கள் யானை பாகன் மற்றும் வனத்துறை கால்நடைத்துறை அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார். அப்போது யானை கட்டப்பட்டுள்ள அறைக்கு சென்று பார்வையிட்ட அமைச்சர் சேகர்பாபு அதற்கு கரும்பு வழங்கினார்.

தொடர்ந்து யானைத் தாக்கி உயிரிழந்த பாகன் உதயக்குமார் மற்றும் அவரது உதவி உறவினர் சிசுபாலன் குடும்பத்தினரை வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அவர், முதல்வர் நிவாரண நிதி 2 லட்சம், திருக்கோவில் சார்பாக 5 லட்சம், கோவில் தக்கார் அருள் முருகன் சார்பில் 3 லட்சம் என மொத்தம் 10 லட்சமும், அவரது உறவினர் சிசுபாலன் குடும்பத்திற்கு 5 லட்சத்துக்கான காசோலை அமைச்சர் சேகர் பாபு வழங்கினார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், யானைகளின் விருப்பப்படி அதற்கு விருப்பமான உணவுகள் மருத்துவ ஆலோசனையின் படி வழங்கப்பட்டு வருகிறது. யானைகள் முகாமிற்கு செல்லும் போது மற்ற யானைகளுடன் இருக்கும்போது அதற்கு சகஜ நிலையில் இருக்கும் என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு முகாமிற்கு யானைகள் அழைத்துச் செல்வதற்கான தேவை இருந்தால் நிச்சயம் அதற்கான பணிகளை மேற்கொள்வோம் என்று தெரிவித்தார். பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் இதுபோல் தீங்குகள் ஏற்படாமல் இருப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்

உணவு தண்ணீர் உள்ளிட்டவை சகஜமாக வருகிறது. 21 நாள் கண்காணிப்பு தேவை. பக்தர்கள் அதிகம் வரும் இடம். யானை பாகன்கள் யானை அருகே இருக்க வேண்டும் என அமைச்சரிடம் வனத்துறை கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கு தான் அதுகுறித்து பாகன்களிடம் அறிவுறுத்தியதாக கூறினார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement