பிரச்சனைக்குரிய டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் - கிராமசபையில் தீர்மானம்
தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடம் ஊராட்சி செந்தியம்பலத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பொதுமக்கள் வார்டு உறுப்பினர்கள் சார்பாக பெண்கள் கழிப்பிடம் மற்றும் பெண்கள் வேலைசெய்யும் ஊராட்சி நர்சரி அருகில் உள்ளதும் பெண்கள் பொதுமக்கள் விவசாயிகள் மாணவர்களுக்கு தொல்லை அளித்து பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடைபெறும் நிலையில் குற்ற பிண்ணணி உள்ள நபர்கள் ஆதிக்கத்தால் பொதுமக்கள் ,வார்டு உறுப்பினர்கள்,காவல்துறை அதிகாரிகளுக்கு பல்வேறு இடையூறு அளித்து வரும் நபர்கள் ஆதிக்கத்தில் உள்ள டாஸ்மாக் 10144 ஐ அகற்ற வேண்டும் என கிராமசபையில் மனு அளித்து தீர்மானிக்கப்பட்டது
மனு நகலை உடனடியாக தமிழக முதல்வர் ,மாவட்ட ஆட்சியர், மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சென்னை,வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு அனுப்பி வைத்தனர்.மேற்படி வார்டு உறுப்பினர்கள் சேர்ந்து குறிப்பிடுகையில் கடந்த அரசால் எங்கள் ஒட்டுமொத்த பொதுமக்களின் எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடை 10144 ஆரம்பிக்கப்பட்டது.இந்த கடையால் பெண்கள்,விவசாயிகள்,இந்த பகுதியில் பயணிக்கும் நபர்கள், ஒட்டுமொத்த ஊராட்சி மக்கள் மற்றும் காமராஜ் நகர் மக்களுக்கு பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடைபெறுகிறது.பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.மேலும் பொதுமக்கள் சார்பில் எம் ஊராட்சியில் இரண்டாவது மதுபானக்கடை யான காமராஜ் நகரில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை அமைவதற்கு முன் கடை திறக்க கூடாது என பல்வேறு எதிர்ப்பு மனுக்கள் ஆட்சியருக்கு அனுப்பப்பட்டது.
மேலும் எம் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் சார்பாக ஊராட்சி மன்ற கூட்டத்திலும் இந்த கடைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும் ஜனவரி 26 /2020 கிராமசபை கூட்டத்திலும் எதிர்ப்பை தெரிவித்து இந்த கடைக்கு எதிராக தீர்மானம் இயற்றப்பட்டது.மேலும் ஊராட்சி 9 வார்டு உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பாக உண்ணாவிரதம் கருப்புக்கொடி ஏற்றி நடைபெற்றது.தொடர்ந்து இந்த கடை அமைந்து இந்த கடையை அகற்ற ஊராட்சி மக்களால் மனு அளிக்கப்பட்டுவருகிறது.மேலும் இந்த கடை அமைந்த பிறகு பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.1)கடந்த 2023 வருடம் இந்த கடை அமைந்திருக்கும் இடத்தில் கொலை முயற்சி சம்பவம் நடைபெற்றதாக இந்த காவல் நிலையத்தில் fir பதிவு செய்யபட்டுள்ளது .2) பார் ஏலம் விட்ட ஒரு மாதத்திலே முறைகேடாக சில்லறை மதுபானம் விற்பனை இந்த கடை வாடகைக்கு விட்டிருக்கும் மற்றும் பார் ஏலம் எடுத்து இருக்கும் என்ற நபரால் நடைபெற்றிருக்கிறது.
கடந்த மாதம் கூட இந்த பகுதியில் பொதுமக்களுக்கு பிரச்சனை செய்து கொண்டிருந்த வாலிபரை கைது செய்து எப்ஆஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் குடிகாரர்களால் பல்வேறு தொல்லை ஏற்படுகிறது என சக்கம்மாள்புரம் பகுதியில் உள்ள பொதுமக்கள் காவல்துறையில் புகார் கொடுத்து காவல் துறை அறிவுறுத்தலின் பேரில் விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. மின்சார கணக்காளர் பெண் ஒருவர் குடிபோதையில் சென்ற ஒரு நபரால் விபத்து ஏற்படுத்தப்பட்டு இருக்கிறார். 6)பல்வேறு திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து இந்த பகுதியில் விவசாய இடங்களில் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே சாயர்புரம் காவல் நிலையத்தில் முறைகேடாக மதுபானம் விற்பனை நடைபெற்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு நடவடிக்கையில் இருந்து உள்ளது. குடிபோதையில் அருகில் உள்ள பெண்கள் கழிப்பிடத்தில் அருகே உட்கார்ந்து கொண்டு குடிகாரர்கள் குடித்து கொண்டு பெருந்தொல்லை அளித்து வருகின்றனர்.பெண்கள் இயற்கை உபாதையை கழிக்க மிகவும் மன உளைச்சலுடன் செல்லும் நிலைமையில் உள்ளனர் .ஊராட்சியில் பெண்கள் நர்சரியும் கழிப்பிடமும் சுமார் 150 அடி அருகில் உள்ளதால் பெண்களுக்கு பல்வேறு இடையூறு நடைபெறுகிறது.இந்த கடை வாடகைக்கு மற்றும் பார் ஏலம் ஏடுத்த நபராலும் பல்வேறு குற்றசம்பவங்கள் நடைபெறுகிறது.கடந்த மாதம் இவர் கத்தியை வைத்து தனது கட்சிக்காரரான ஒரு நபரை குத்த சென்றுள்ளதாக காவல் துறையில் பாதிக்கப்பட்ட நபரால் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இவர் இங்குள்ள பகுதியில் உள்ள மக்களை மிரட்டி பல்வேறு அநியாயங்களை நிறைவேற்றி வருகிறார்.எடுத்து காட்டு பொதுமக்களுடைய கோரிக்கையான மதுபானக் கடையை அகற்ற மனு அளித்த எங்கள் பெண் ஊராட்சி உப தலைவர் மீது பொய் புகார் அளித்து மற்றும் தன் கட்சிக்காரர்களால் இழிவு படுத்தி பல்வேறு இடையூறுகளை செய்து அதுவும் டிஎஸ்பி., அலுவலகத்தில் நிலுவையில் உள்ளது. முதல்வர் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கடையை கடந்த வருடம் 500 கடைகளை அகற்றி உள்ளார்.
கடந்த வாரம் சென்னை உயர்நீதி மன்ற மெட்ராஸ் கிளையில் பொதுமக்களுக்கு இடையூராக உள்ள பொதுமக்கள் பிரச்சனைக்குரிய உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற உத்தரவிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.எனவே ஆரம்ப முதலே எதிர்ப்பும் பல்வேறு குற்றச்சம்பவங்ஙள் நடைபெறுவதற்கு காரணமாகவும் மற்றும் குற்றச்செயல்கள் செய்யும் பிண்ணனியில் உள்ள இந்த கடையை அகற்ற நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற தாங்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கருத்துக்கள்