அடுத்து வருவது அதிமுக ஆட்சி தான் : எஸ்.பி.வேலுமணி பேச்சு!
2026ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமையும் என அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ பேசினார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு பேசுகையில், " முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நான்கரை ஆண்டுகள் சிறப்பான முறையில் ஆட்சி நடத்தினார்கள். மக்களுக்கு தேவையான திட்டங்களை தந்தார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் என்பது வேறு ஆனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
வருகின்ற 2026ல் நிச்சயமாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமையும் நீங்கள் எதிர்பாக்கும் நல்ல கூட்டணியும் அமையும் வருகின்ற ஆட்சி அதிமுக ஆட்சி தான் என்றார்.
கருத்துக்கள்