advertisement

போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் - தூத்துக்குடி மாவட்ட கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

நவ. 24, 2024 8:21 முற்பகல் |

தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருடன் இணைந்து பொதுமக்கள்  போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்க தீர்மானம் நிறைவேற்றினர்.

 தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பல்வேறு கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோரின் சீரிய முயற்சியால் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர்  கிராம் சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களுடன் இணைந்து தூத்துக்குடி மாவட்டத்தில்  போதைப் பொருள்களை முற்றிலும் ஒழிக்க தீர்மானம் எடுத்துக் கொண்டனர்.தீர்மானம் எடுத்துக்கொண்ட பொதுமக்களையும், காவல்துறையினரையும் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement