advertisement

ஊராட்சி அதன் நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும் - தூத்துக்குடி ஆட்சியர் பேச்சு

நவ. 23, 2024 12:12 பிற்பகல் |

எந்த நோக்கத்திற்காக ஊராட்சி சுயாட்சிக்கு ஒரு முயற்சி எடுக்கப்பட்டதோ, அதனை கருத்தில் கொண்டு உள்ளுரில் இருக்கக்கூடிய பிரச்சனைகளையும், சிக்கல்களையும் சரி செய்து கொடுப்பதற்காக தலைவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் என அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத்,தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம், திருப்பணி செட்டிகுளம் ஊராட்சியில் உள்ள சமுதாய நலக்கூட வளாகத்தில் கிராமசபைக் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் நடைபெற்றது.

உடல் நலத்தைப் பேணுவதற்கான நமது மருத்துவத்துறை சொல்லக்கூடிய ஆலோசனைகளையெல்லாம் நீங்கள் நல்லபடியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நூறு சதவீதம் திறந்தவெளி மலம் கழித்தல் அற்ற கிராமம் என்பதை உறுதி படுத்தியுள்ளீர்கள். அதற்காக நிறைய விருதுகளையும் பெற்று சிறந்த கிராம ஊராட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். எந்த விசயமாக இருந்தாலும் அலுவலரை நேரடியாக அணுகி தனது ஊராட்சிக்காக நல்ல விசயங்களை செய்து கொடுக்க தொடர்ந்து முயற்சி செய்து வரக்கூடிய உங்கள் ஊராட்சி மன்றத் தலைவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். 

எந்த நோக்கத்திற்காக ஊராட்சி சுயாட்சிக்கு ஒரு முயற்சி எடுக்கப்பட்டதோ, அதனை கருத்தில் கொண்டு உள்ளுரில் இருக்கக்கூடிய பிரச்சனைகளையும், சிக்கல்களையும் சரி செய்து கொடுப்பதற்காக தலைவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் என அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். அதை இந்த ஊராட்சியில் சிறப்பாக செய்கிறீர்கள். இதேபோன்று இந்த ஊராட்சியினை ஒரு முன்மாதிரி ஊராட்சியாக வைத்து பிற ஊராட்சிகளில் இதனை விரிவுபடுத்த முயற்சி செய்வோம். இங்க பங்கேற்றிருக்கக்கூடிய அனைத்து மக்களும் அரசு நலத்திட்டங்களையும், பிற அரசுத்துறைகளினுடைய திட்டங்களையும் நல்ல படியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று இந்த நேரத்திலே கேட்டுக்கெள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் பேசும் போது தெரிவித்தார்

கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாறன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உலகநாதன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பென்னட் ஆசீர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் விக்ணேஸ்வரன், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத் திட்டம் ஹபிபூர் ரஹ்மான், இணை இயக்குநர் (வேளாண்மை) (பொ) மனோரஞ்சிதம், திருப்பணிசெட்டிகுளம் ஊராட்சி மன்றத் தலைவர் சுயம்புலிங்கம், அரசு உயர் அலுவலர்கள், மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement