வீரவநல்லூர் போலீசாரை கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டம் - மக்கள் தேசம் கட்சி நிர்வாகிகள் நெல்லையில் பேட்டி
விசாரணை என்ற பெயரில் சாதிய வன்மத்தோடு செயல்படும் வீரவநல்லூர் போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மக்கள் தேசம் கட்சி அறிவித்துள்ளது.
மக்கள் தேசம் கட்சி வழக்கறிஞர் ஆசை கதிரவன் மாநில இளைஞரணி செயலாளர் கே பி கே ராஜேந்திரன் மாநில துணைத்தலைவர் பிரைட் ராமச்சந்திரன் ஆகியோர் நெல்லையில் நிருபர்களிடம் கூறுகையில், எங்கள் கட்சியின் சேரன்மகாதேவி ஒன்றிய நிர்வாகிகளாக ஆசைத்தம்பி, அலெக்ஸ் குமார் ஆகியோர் உள்ளனர்.இவர்கள் மீது சில குற்ற வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.ஆனால் கடந்த இரண்டரை வருடங்களாக எந்த ஒரு குற்ற செயலிலும் ஈடுபட்டதாக வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.அவர்கள் இருவரும் பட்டியலின வகுப்பை சேர்ந்தவர்கள்.இதற்கிடையில் வீரவநல்லூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவல் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா,காவலர் விக்னேஷ் ஆகியோர் சாதிய மனப்பான்மையுடன் செயல்பட்டு வருகின்றனர் .
,கடந்த 20ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கு ஆசைத்தம்பி தங்கியிருந்த வீட்டுக்கு சென்று அவரை கைது செய்த தனிப்படை போலீசார் அங்கிருந்து மற்றொரு கட்சி நிர்வாகி அலெக்ஸ் குமார் வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று அவரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர். அதை தொடர்ந்து 4 பேர் சேர்ந்து எங்கள் கட்சி நிர்வாகிகள் கையை அடித்து உடைத்தனர்.கைது செய்து 24 மணி நேரத்தில் நீதிமன்ற காவலில் அடைக்காமல் கைகள் உடைக்கப்பட்ட இருவரையும் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிப்பதாக கூறி மிரட்டல் விடுத்த வண்ணம் உள்ளனர் .
எனவே உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா காவலர் விக்னேஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீதான சட்ட விரோத தடுப்பு காவல் நடவடிக்கைகள் கைவிட வலியுறுத்தி தாழ்த்தப்பட்ட அமைப்புக்களின் தலைவர்களை ஒருங்கிணைத்து மாநிலம் தழுவிய மக்கள் தமிழகம் கட்சியின் ஆர்ப்பாட்டம் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்படும்"என்றனர்.
பேட்டியின் போது, நெல்லை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பாலமுரளி நெல்லை மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் பெருமா வளவன் பறையர் பேரவை மாவட்ட செயலாளர் வரதன் நெல்லை மாவட்ட இளைஞரணி செயலாளர் டென்சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்