பழனி மலை அடிவாரத்தில் சுற்றி திரியும் பன்றிகள் - பக்தர்கள் கடும் அச்சம் !
பழனி மலை அடிவாரத்தில் சுற்றி திரியும் பன்றிகளாலும் மேலும் குவிந்து கிடக்கும் குப்பைகளாலும் பக்தர்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
பிரசித்தி பெற்ற பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி தரும் விதத்தில் பன்றிகள் அடிவாரம் பகுதிகளில் சுதந்திரமாக சுற்றி வருகிறது. இதனால் அப் பகுதி மக்களும், பக்தர்களும் பீதியிலும், மரண பயத்திலும் உள்ளனர். இந்த விஷயத்தை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளுமா? நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
அது மட்டுமின்றி அப்பகுதியில் மலை போல் குவித்து வைத்திருக்கும் கழிவுகள் காற்று, சுவாசம் மூலம் பக்தர்களுக்கு பரவி பேராபத்தை விளைவிக்கும் என்பதை உணர்ந்து அதை அகற்றவும்,மேலும் மலை போல் கழிவுகளை குவித்து வைத்திருக்கும் அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கைகள் எடுப்பாரா? என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
கருத்துக்கள்