இலங்கையின் 9வது அதிபராக அநுர குமார திசநாயக்க பதவியேற்பு
கொழும்பில் உள்ள அதிபர் செயலகத்தில் எளிமையாக நடந்த விழாவில் இலங்கை உச்ச நீதிமன்ற நீதிபதி ஜெயந்த ஜெயசூரியா அநுர குமார திசநாயக்கவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இலங்கை அதிபர் தேர்தல் நேற்று முன் தினம் நடைபெற்ற நிலையில், அன்றைய தினம் மாலையிலேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதல் சுற்றில் யாருக்கும் 50 சதவிகித வாக்குகள் கிடைக்காத நிலையில், முதல் முறையாக இரண்டாம் விருப்ப வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இறுதியில் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவர் அனுர குமார திசநாயக்க, 55 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.இதற்கிடையே, இன்று இலங்கையின் 9வது அதிபராக அனுர குமார திசநாயக்க பதவியேற்றுக்கொண்டார். கொழும்பில் உள்ள அதிபர் செயலகத்தில் எளிமையாக நடந்த விழாவில் இலங்கை உச்ச நீதிமன்ற நீதிபதி ஜெயந்த ஜெயசூரியா அனுர குமார திசநாயக்கவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
கருத்துக்கள்