தூத்துக்குடியில் அனுமதி பெறாமல் எடுத்த குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு
தூத்துக்குடியில் உரிய அனுமதியின்றி முறைகேடாக குடிநீர் இணைப்பு எடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் குடிநீர் இணைப்புகள் கோரி வரப்பெறும் மனுக்கள் பொது நலம் கருதி விரைவாக பரிசீலனை செய்யப்பட்டு குடிநீர் இணைப்புகள் முறைப்படி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாநகரின் ஒரு சில பகுதிகளில் மாநகராட்சியில் முறையாக அனுமதி பெறாமல் தன்னிச்சையாக குடிநீர் இணைப்புகள் முறைகேடாக எடுக்கப்பட்டு வருவதாக பல்வேறு தரப்பினரிடமிருந்து புகார்கள் வரப்பெற்றதன் அடிப்படையில் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கள ஆய்வு மேற்கொண்டதில் நேதாஜி நகர் மற்றும் ஆசிரியர் காலனி பகுதிகளில் வீட்டிணைப்புகள் மாநகராட்சி கட்டணம் ஏதுமின்றி அனுமதி பெறாமல் மாநகராட்சியின் பிரதான குடிநீர் குழாயில் இருந்து குடிநீர் இணைப்புகள் எடுக்கப்பட்டுள்ளது .
இதையடுத்து மேற்படி வீட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன். உரிமையாளர்கள் மற்றும் இச்செயலுக்கு காரணமான பணியாளர்கள் மீதும் காவல்துறை மூலமாக நடவடிக்கை எடுக்கும் வகையில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கருத்துக்கள்