advertisement

திமுக அரசு செய்த தவறால், இளைஞர்கள் பாதிக்கப்படலாமா? - அண்ணாமலை கேள்வி

ஏப். 04, 2025 10:46 முற்பகல் |

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை , தி.மு.க அரசு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது,"கடந்த 2024ம் ஆண்டுக்கான, சார்பு ஆய்வாளர், இரண்டாம் நிலைக் காவலர் தேர்வுகளை நடத்தாமல், இளைஞர்களின் ஒரு ஆண்டினை வீணடித்த திமுக அரசைக் கண்டித்தும், 2025ம் ஆண்டுக்கான சார்பு ஆய்வாளர், இரண்டாம் நிலைக் காவலர் தேர்வில், 2024ம் ஆண்டு அடிப்படையிலேயே வயது வரம்பை நிர்ணயிக்க வேண்டும் என்றும், ஏற்கனவே வலியுறுத்தியிருந்தோம்.இந்நிலையில், இன்று வெளியிடப்பட்டு இருக்கும் காவலர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பில், வயது வரம்பு 01-07-2025 தேதி அன்று 30 வயது நிரம்பியிருக்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

கடந்த ஆண்டு தேர்வுகள் நடத்தாமல் பல நூறு இளைஞர்களின் வயது வரம்பு ஒரு ஆண்டு தள்ளிப் போயிருக்கிறது.தி.மு.க., அரசு செய்த தவறால், இளைஞர்களின் காவல்துறை கனவு பறிபோவதை அனுமதிக்க முடியாது.உடனடியாக, காவலர் தேர்வுகளுக்கு, 2024ம் ஆண்டு அடிப்படையிலேயே வயது வரம்பை நிர்ணயித்து, மாற்று அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement