இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் கல்லூரி நாள் விழா
மாணாக்கர்கள் குடும்பமும் ... நாடும் ... திறம்பட செயல்படுவதற்கு உறுதுணையாக இருப்பது அவசியமென இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் நடைபெற்ற 55 - வது ஆண்டு கல்லூரி நாள் விழாவில் டாக்டர் அ.முகமது அலி ஜின்னா வலியுறுத்தினார்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில், 55 வது ஆண்டு கல்லூரி நாள் விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் ,கல்லூரி துணைமுதல்வர் முஸ்தாக் அகமது கான் வரவேற்றார்.கல்லூரி செயலர் ஜபருல்லாகான் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான் கல்லூரி ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். கல்வியியல் கல்லூரி முதல்வர் முகம்மது முஸ்தபா, சட்டகளம் நாளிதழ் நிறுவனர் - ஆசிரியர் டாக்டர் அ. முகமது அலி ஜின்னா ஆகியோர் மாணவர் - மாணவியர்கள் கல்வி கற்று குடும்பமும்... நாடும் ... திறம்பட செயல்படுவதற்கு உறுதுணையாக இருப்பது அவசியம் என்பதை மனதில் நிலை நிறுத்தி கல்வி கற்க வேண்டுமென வலியுறுத்தி வாழ்த்தி பேசினர்.
சிறப்பு அழைப்பாளர்களாக எமனேஸ்வரம், சௌராஷ்டிரா சபை, தலைவர் கோவிந்தன் , ராமநாதபுரம், மாவட்ட ஆட்சியர் வளாகம், இணை தாசில்தார் சத்யபாமா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியும்,பல்கலைக்கழக ரேங்க் , பல்கலைக்கழக தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்-மாணவியர்களுக்கு பரிசுகள் சான்றிதழ்களை வழங்கினர். மேலும், பரமக்குடி, முத்தாலம்மன் பாலிடெக்னிக் கல்லூரி, மின் மின்னணு பொறியியல், துறைத்தலைவர் ராமநாதன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில், கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக், சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் சபினுல்லாகான் உள்பட பெற்றோர்கள், மாணவர்-மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டனர். வேதியியல் துறைத்தலைவர் செய்யது அபுதாஹிர் நன்றி கூறினார்.
மாமுஜெயக்குமார்.
சிறப்பு செய்தியாளர்.
கருத்துக்கள்