வைகை ஆற்று படுகையில் தனி நபர்கள் ஆக்கிரமிப்பு நீர் பிடிப்பு பகுதி பாதிப்பு
மஞ்சள் பட்டணம் பகுதியில் வைகை ஆற்றுப் படுகையில் தனி நபர்கள் ஆக்கிரமிப்பால் நீர் பிடிப்பு பகுதி பாதிப்பு . ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளார் .
அரசுக்கு சொந்தமான இடங்கள் , நீர் பிடிப்பு பகுதிகள், வைகையாற்றங்கரை பகுதிகளில் தனியார் சிலர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஆக்கிரமிப்பு செய்து தனக்குரியது போன்று அனுபவித்து வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.அதனடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகரசபை பகுதியான மஞ்சள் பட்டணம் பகுதியில் உள்ள வைகை ஆற்றுப் படுகையின் வடபுறம் தனி நபர்கள் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் வைகையாற்றின் நீர் பிடிப்பு பகுதி வெகுவாக பாதிக்கப்படுகிறது.
இதனையறிந்த அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வைகையாற்றில் தண்ணீர் வரும் காலங்களில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் நீர் பிடிப்பு பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.
கருத்துக்கள்