பெங்களூருவில் நடுரோட்டில் ரீல்ஸ் எடுத்த வாலிபர் கைது
ஏப். 19, 2025 4:07 முற்பகல் |
பெங்களூருவில் பரபரப்பான சாலையில் நடுரோட்டில், ரீல்ஸ் போடுவதற்கு நாற்காலியில் அமர்ந்து டீ குடிப்பது போல் வீடியோ எடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் பிரபலமடைய வேண்டும் என்ற ஆசையில் ஒரு நபர், சாலையின் நடுவில் ஒரு நாற்காலியில் அமர்ந்து வாகனங்கள் அவரை கடந்து செல்லும் போது தேநீர் அருந்தினார். இன்ஸ்டாகிராமில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ, விரைவில் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. இதைத் தொடர்ந்து, இந்த வினோதமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி அவரைக் கண்டுபிடித்தனர்.பின்னர், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவித்ததற்காகவும், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட சாலைகளில் ஸ்டண்ட் செய்ததற்காகவும் அந்த நபரை வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
கருத்துக்கள்