advertisement

மாணவன் கையில் கொடியை கொடுத்து பேருந்து சேவையை தொடங்கிய அமைச்சர்!

ஏப். 19, 2025 5:02 முற்பகல் |

 

அரசு பள்ளி மாணவனின் கோரிக்கையை ஏற்று, புதிய வழித்தடத்தில் தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேருந்து சேவையை தொடக்கி வைத்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காரியாபட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த பி.புதுப்பட்டி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளி நிகழ்ச்சிக்கு சில தினங்களுக்கு முன்பு சென்றிருந்தேன். அப்போது அப்பள்ளி மாணவர் அன்புக்கரசு தனது ஊரான ஆத்திகுளத்தில் இருந்து 2 கி.மீ நடந்து பள்ளிக்கு வருவதாகத் தெரிவித்து, தங்கள் ஊருக்குப் பேருந்து சேவை வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்."அன்புக்கரசு என்ற 7ம் வகுப்பு மாணவனின் கோரிக்கையை நிறைவேற்றியதில் அளவு கடந்த மகிழ்ச்சி"

இப்பேருந்து சேவையின் மூலம் ஆத்திகுளம் கிராமத்திலிருந்து வரும் அனைத்துப் பள்ளி, கல்லூரி மாணவர்களும் பயனடைவார்கள். இந்த பிஞ்சுக் குழந்தைகளின் கனவு மெய்ப்பட திராவிட மாடல் அரசு எத்தனை உதவிகளையும் செய்யத் தாமதிக்காது" என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement