மதுரை அல்-அமீன் பள்ளி உதவித்தலைமையாசிரியருக்கு நல்லாசிரியர் விருது வழங்கும் விழா
மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி உதவித்தலைமையாசிரியரின் 32 ஆண்டுகள் பணி நிறைவைப் பாராட்டி நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நடைபெற்றது .
மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் 32 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றியமைக்காக அல்-அமீன் பள்ளியின் உதவித் தலைமையாசிரியர் , தமிழாசிரியர் இரஹ்மத்துல்லாவிற்கு பள்ளி கூட்டரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது.விழாவிற்கு, பள்ளித் தாளாளர் முகமது இதிரிஸ் தலைமை வகித்து பணி நிறைவு பெற்ற உதவித்தலைமையாசிரியர் இரஹ்மத்துல்லா விற்கு நல்லாசிரியர் விருது வழங்கி வாழ்த்துரை வழங்கினார். பள்ளி தலைமையாசிரியர் ஷேக் நபி முன்னிலை வகித்தார். ஆசிரியர் ஷாஜகான் அனைவரையும் வரவேற்றார்.
அல்-அமீன் நகர் பள்ளிவாசல் தலைவர் முகமது இல்யாஸ், மதுரை வக்பு வாரிய கல்லூரியின் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் முகமது அப்துல்லா, எம்எல்டபிள்யூஎ மேல்நிலைப்பள்ளி செயலாளர் , தலைமையாசிரியர் நாகசுப்பிரமணியன் பணி நிறைவுப் பாராட்டுரை வழங்கினர். தமிழியக்க நிர்வாகிகள் பழனிச்சாமி. மாரியப்பன், தமிழ் ஆர்வலர் ஆதித்தா ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். ஆசிரியர்கள் முகமது ரபி,சையது முகமது யூசுப், முகைதீன் பிச்சை, அல்ஹாஜ் முகமது. சண்முகசுந்தரம் ஆகியோர் பாராட்டி பேசினர். பள்ளி ஆசிரியர்கள் , அலுவலர்கள் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
மாமுஜெயக்குமார்.
சிறப்பு செய்தியாளர்.
கருத்துக்கள்