ஆர்.எஸ்.மங்கலம் பிரிட்டோ மழலையர் பள்ளியில் 40-வது ஆண்டு விழா
ஏப். 19, 2025 4:52 முற்பகல் |
ஆர்.எஸ்.மங்கலம் பிரிட்டோ மழலையர், தொடக்கப் பள்ளியில் 40-வது ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது .
விழாவிற்கு, பேரூராட்சி தலைவர் கேசரகான் தலைமை தாங்கினார். முன்னாள் பேரூராட்சி தலைவர் அஜ்மல் கான் முன்னிலை வகித்தார். விழாவில், பள்ளி மாணவர் - மாணவியர்களது கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.விழாவில்,தனியார் பள்ளிகள் முன்னேற்ற சங்க மாநில பொதுச் செயலாளர் சதீஷ், சங்க பொறுப்பாளர்களும் ஜாஸ் கல்வி குழும தலைவர் சலாஹுதீன், உள்ளூர் பிரமுகர்களும் ஏராளமான பொதுமக்களும் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டினை பள்ளி தாளாளர் ஹாஜி கமருதீன் மிகச் சிறப்பாக செய்திருந்தார்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.





கருத்துக்கள்