advertisement

நாகர்கோவிலில் சாலையோர உணவு கடைகளை மேயர் ஆய்வு

ஏப். 18, 2025 3:54 முற்பகல் |

நாகர்கோவில் மாநகராட்சி அனுமதியுடன் அமைக்கப்பட்ட சாலையோர  உணவு கடைகளை மேயர் மகேஷ் ஆய்வு செய்தார்.

நாகர்கோவில் மாநகராட்சி அனுமதியுடன் வெட்டூர்ணிமடம். அண்ணா விளையாட்டு அரங்கம், அவ்வை சண்முகம் சாலை, நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம், K.P சாலை ஆகிய பகுதிகளில் மாநகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சாலையோர  உணவு கடைகளை மேயர் மகேஷ்  மற்றும்  மாநகராட்சி ஆணையாளர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் பார்வையிட்டு மேற்கொண்டு சாலையோர வியபாரக்கடைகளை ஒழுங்குப்படுத்தி வியபாரம் செய்ய அதிகாரகளிடம் அறிவுறுத்தினார். இதில் மாநகர நல அலுவலர் ஆல்பர் மதியரசு,  உதவி செயற்பொறியாளர் ரகுராம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement