ஏரல் அருகே தாமிரபரணி தடுப்பணையில் மூழ்கி ஒருவர் பலி!
ஏரல் அருகே தாமிரபரணி தடுப்பணையில் குளித்து கொண்டிருந்தபோது தொழிலாளி ஒருவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம்,ஏரல் அருகே உள்ள கீழமங்கலகுறிச்சியை சேர்ந்தவர் தினகரன் (53). இவருக்கு ஆறுமுகசெல்வி என்ற மனைவியும், முத்துமாரி என்ற மகளும் உள்ளனர். இவர் தினமும் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வடகால் வாய்க்காலில் குளித்துவிட்டு வீட்டுக்கு திரும்புவது வாடிக்கையாம்.
தற்போது வடகால் வாய்க்காலில் தண்ணீர் இல்லாததால் சம்பவத்தன்று மாலையில் வேலை முடிந்து அருகில் உள்ள மங்கலக்குறிச்சி தாமிரபரணி ஆற்று தடுப்பணையில் குளிக்க சென்றுள்ளார். பின்னர் அவர் இரவு வரை வீடு திரும்பாததால், குடும்பத்தினர், உறவினர்கள் அவரை தேடி சென்றுள்ளனர். அப்பொது ஆற்று தடுப்பணை அருகே அவரது செருப்பு மற்றும் உடைகள் இருந்துள்ளது.
இதை பார்த்த உறவினர்களும், பொதுமக்கள் சிலரும் தண்ணீரில் இறங்கி தேடினர். அப்போது தண்ணீருக்கு அடியில் இறந்த நிலையில் கிடந்த அவரது உடலை பொதுமக்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தர்.. இது குறித்த தகவலின் பேரில் ஏரல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கருத்துக்கள்