advertisement

கரூர்: காதலனுடன் தப்பிய சிறுமி!  கடத்தல் - உறவினர்கள் கைது!

ஏப். 18, 2025 7:08 முற்பகல் |

 

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே, பெற்றோர் கட்டாயமாக திருமணம் செய்து வைக்க முயன்றதால், காதலனுடன் தப்பிய 17 வயது சிறுமியை வழியில் கடத்தியதாகக் கூறப்படும் இரண்டு உறவினர்கள் கைது செய்யப்பட்டனர்.

காதலுடன் திருமணம் செய்துக்கொண்டு வெளியூர் செல்ல திட்டமிட்ட அந்த சிறுமி, ஒரு வேனில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, தகவல் தெரிந்த அவரது உறவினர்கள், கன்னவாய் அருகே அந்த வாகனத்தை வழிமறித்து தாக்கியுள்ளனர்.சம்பவத்தின்போது, சிறுமியின் காதலனும், அவரது நண்பர்களும் மிரட்டப்பட்டதாக கூறப்படுகிறது. வாகனம் சேதப்படுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, காதலனின் தந்தை போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், சிறுமியின் இரு உறவினர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கடத்தல் மற்றும் தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement